மநீம – வுக்கு அதிக இடங்களா.. மதிமுக மற்றும் விசிக-வை கடப்பில் போட்ட ஸ்டாலின்!! 

0
300
more-seats-for-makkal-neethi-maiiyam

மநீம – வுக்கு அதிக இடங்களா.. மதிமுக மற்றும் விசிக-வை கடப்பில் போட்ட ஸ்டாலின்!!

மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் இணையப் போகிறது என்பது புதிதான ஒன்று கிடையாது.ஓர் ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கான அடித்தளத்தை போட ஆரம்பித்து விட்டனர்.குறிப்பாக எம்பி ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுடன் கைகோர்த்து கமல்ஹாசனும் சென்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வின் போதே பலர் அடுத்த தேர்தலில் கட்டாயம் காங்கிரஸ்-வுடன் ஒன்றிய திமுகவுடன் மநீம கட்டாயம் கூட்டணி வைக்கும் என கூறினர்.இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறியா சில நிகழ்வுகளும் அதற்கேற்றார் போலவே அமைந்தது.

கமல்ஹாசனின் 234 ஆவது படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பது குறித்து சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.குறிப்பாக வானதி சீனிவாசன் இது குறித்து கூறுகையில், உதயநிதியுடன் தற்போது கமல்ஹாசன் தான் நெருக்கமாக உள்ளார்.அதனால் கோவை மாவட்ட மக்கள் வைக்கும் கோரிக்கைகளை எளிமையாக நிறைவேற்றி தரலாம் அல்லவா என்று கேலியாக கூறினார்.

இதையடுத்து தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்தும் அதற்கு இடம் ஒதுக்குவது குறித்தும் பரபரப்பாக ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கைகோர்ப்பது உறுதியாகியுள்ளது.திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் மநீம – விற்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்க போகிறது என்று பெரும் கேள்வியாக உள்ளது.

அதுமட்டுமின்றி மநீம கை சின்னத்தில் நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றது. இந்த முறை ஆளும் கட்சியாக உள்ளது.இதனால் வாக்குகள் குறைய அதிக வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகள் தங்களது சின்னத்தில் தனித்துவமாகவே நிற்க விரும்புகின்றனர்.இது மற்றொரு இழப்பாக திமுக-விற்கு இருக்கக் கூடும்.

இந்நிலையில் மநீம – விற்கு கூடுதல் சீட் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.இருப்பினும் கடந்த தேர்தலில் மநீம தனித்து நின்று போட்டியிட்டதுடன் திமுக-வை கடுமையாக சாடியது.இம்முறை கூட்டணி வைத்து வெற்றி பெற்றாலும் நாளடைவில் திமுக-வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிறகு இந்திய ஜனநாயக கட்சி போல வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் சுற்றுவட்டாரங்கள் கூறி வருகின்றனர்.