cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அபார சதம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை சிறப்பாக விளையாடி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். கே எல் ராகுல் சதமடித்தார் என எதிர்பார்த்த நிலையில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி சதம் விளாசினார்.
இதனை தொடர்ந்து 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.