சென்னையை விட்டு செல்லும் தோனி..! – சோகத்தில் ரசிகர்கள்

0
167

ஐபில் போட்டிக்காக சென்னைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னையை விட்டு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் 14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் சென்னை, மும்பை, அகம்தாபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்தப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மைதானங்களில் எந்தவொரு அணியும் விளையாடதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் 14வது ஐபிஎல் போட்டி நடைபெறுவதை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். சென்னை ரசிகர்களால் கொண்டாடபடும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு போன்றவர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பெரும்பாலும் மும்பை மைதானத்தில் விளையாட உள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், “ சேப்பாக்கத்தில் பயிற்சிபெற்று வரும் சிஎஸ்கே வீரர்கள் விரைவில் மும்பை செல்லவுள்ளனர். மற்ற வீரர்களும் விரைவில் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். மார்ச் 26ஆம் தேதி மும்பை செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

இதனால் மார்ச் 10ம் தேதி முதல் சென்னையில் தங்கி பயிற்சி எடுத்து வரும் மகேந்திர சிங் தோனி, அம்பத்தி ராயுடு போன்றவர்கள் சென்னையில் இருந்து புறப்பட உள்ளனர். இவர்களுடன் சின்னத்தல எனறு ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னாவும் இணைய உள்ளார்.