Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்லாவில் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் எம்.எஸ். தோனி! புகைப்படம் உள்ளே!

விடுமுறை நாட்களில் தனது குடும்பத்தினருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் எம்எஸ் தோனி கழித்து வருகிறார்.அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கொரோனா தற்போது குறைந்து வருவதால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தளர்வு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு குடும்பத்துடன் சென்று தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் 2021-ன் 14வது சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி அட்டகாசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது.

 இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் கடந்த மே மாதத்தில் தள்ளி வைக்கப்பட்டது. போட்டிகளை ஒத்திவைத்த போதிலும் முன்னணியில் இருந்த எம்.எஸ்.தோனி, மற்ற அனைத்து அணியினரும் பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே ஹோட்டலை விட்டு வெளியேற முடிவு செய்து அதன்படி ஊருக்கு திரும்பினார்.

 இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 2021-ன் மிச்சமிருக்கும் போட்டிகள் மீண்டும் நடக்கவுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

 இதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது மனைவி சாக்‌ஷி தோனி இன்ஸ்டாகிராமில் தோனி வீட்டிலேயே தன் செல்லப்பிராணிகளுடன் பொழுதை கழித்து வருகிறார் என குறிப்பிட்டு புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார்.

 இந்த நிலையில் தற்போது தோனி தனது குடும்பத்தினருடன் சிம்லா சென்றுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநில அரசு கோவிட் -19 விதிமுறைகளை தளர்த்தியுள்ள நிலையில், தோனி அங்கு சென்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழித்து வருகிறார்.

 இந்த புகைப்படங்களை சாக்‌ஷி தோனி மற்றும் தோனியின் மகள் ஷிவா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் அதில் தோனி தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமாக மீசை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.

 மேலும் சிம்லாவின் பாரம்பரிய டோப்பி (தொப்பி) அணிந்திருப்பதையும் காண முடிகிறது. இந்த பாரம்பரியமான மற்றும் ஸ்டைலான தலைக்கவசம் 'குலு டோபி' என்று அழைக்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் புதிய தோற்றம் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Exit mobile version