Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

#image_title

எம் எஸ் தோனி ஓய்வு. சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேனும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய மகேந்தகர சிங் தோனி அவர்கள் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சேம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் இரண்டு முறை சேம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். தற்போது இவர் எப்போது ஓய்வு அறிவிப்பார் என்று அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றர். இந்த நிலையில் எம்.எஸ் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த சுரேஷ் ரெய்னா அவர்கள், “எம் எஸ் தோனி அவர்கள் சி.எஸ்.கே அணிக்காக இன்னொரு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். அதே சமயம் நடப்பு ஐபிஎல் தொடரோடு எம் எஸ் தோனி அவர்கள் ஓய்வு பெற மாட்டார். அவர் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.
Exit mobile version