சங்கட்டமான சூழ்நிலையில் சிக்கிய மும்பை, கொல்கத்தா அணி

0
132

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.  மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் அபுதாபியில் உள்ளன. அந்த இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாததால் அதிருப்தியில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 7 நாட்களுக்கு மேலாக ஓட்டல் அறையிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியே வருவதற்கு இன்னும் அனுமதி இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்சில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த இரு அணி வீரர்களும் ஓட்டல் அறையிலேயே முடக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.