Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காயத்தில் இருந்து மீண்ட முர்ரே

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 31-ந்தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்று இன்றி இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, பெல்ஜியம் வீராங்கனை கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது.  நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்பதற்கு வசதியாக முன்னாள் சாம்பியன்கள் முர்ரே நீண்டநாள் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மூன்று குழந்தைகளின் தாயாரான 37 வயதான கிலிஸ்டர்ஸ் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு இந்த ஆண்டில் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version