மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!! பல விதமாக துரத்தும் பிரச்சனைகள்!!

0
137
Nayanthara caught in controversy again!! Many kinds of chasing problems!!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!! பல விதமாக துரத்தும் பிரச்சனைகள்!!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 இவர் ஏராளமான திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பிற்காக ஏராளமான விருதுகளையும் வென்று இருக்கிறார்.

இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் காதிலித்து திருமணம் செய்து கொண்டார்.

 இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அடுத்து ஒருசில மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாயின் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

 நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. இவருக்கு சினிமா பக்கம் சூப்பராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏராளமான பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

திருமணம், குழந்தைகள் என அனைத்திலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். மேலும் அஜித்தின் பட வாய்ப்பை தவறவிட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இவருக்கு புது பிரச்சனையான நயன்தாராவின் மாமனார் சொத்துகளை ஏமாற்றி விட்டார் என்று புகார் வந்துள்ளது.

விக்னேஷ் சிவனின் தந்தை இறந்து விட்ட நிலையில் தற்போது அவர் உயிருடன் இருந்த போது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என்று அவரின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் நயன்தாராவின் மாமனார் அவரின் உறவினர்களுக்கே தெரியாமல் சொத்தை கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரின் மனைவி, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் வந்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் அவரின் நெருங்கிய உறவினர்களை கூட அழைக்கவில்லை என்று அப்புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த செய்தி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல பிரச்சனைகளில் இருக்கும் நயன்தாராவிற்கு இப்போது புது சிக்கலாக இது எழுந்துள்ளது. எனவே இவர் நிம்மதியை இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.