டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 1 சில்வர் பதக்கமும், 1 வெண்கல பதக்கமும் மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் 64-வது இடத்தில் உள்ளது.
இதில், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
இதில், தனது முதல் வாய்ப்பில்லையே
86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக சுலபமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று போட்டி தகுதிப்பெற்றுள்ளார்.