Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

#image_title

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இந்தாண்டும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு (https://ne et.nta.nic.in/) இணையதளத்தில் வெளியாகும்.

Exit mobile version