துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
103
New arrangements for students who wrote the supplementary exam!! Important announcement released by the Department of School Education!!

துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது.

இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இவ்வாறு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.

அந்த வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைதேர்வு எழுதிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் வருகின்ற ஜூலை 28 ம் தேதி நடத்த உள்ளதாக பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த முகாமில் துணை தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்வி செல்ல ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கலூரிகளில் சேருவது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.

இதனால் துணைத்தேர்வு எழுதிய 10 மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அறிவூர்த்தியுள்ளது.எனவே பள்ளி மாணவர்களின் தலைமை ஆசிரியர்கள் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களை ஜூலை 28 ம் தேதி நடக்க உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது.