Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விராட் கோலியின் கேப்டன் பதவி .பறிக்கப்பட்டது ஏன்? உண்மை நிலவரம் இதுதான்!

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது, ஏற்கனவே டி20 போட்டிகள், ஐபிஎல் தொடர், உள்ளிட்ட போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து வந்தார். இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார்.

இந்திய அணியின் கேப்டனாக 95 போட்டிகளில் விராட் கோலி செயல்பட்டிருக்கிறார், இதில் இந்திய அணி 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும், 1 போட்டியில் ட்ராவும், கண்டிருக்கிறது இந்த பட்டியலில் டோனி 110 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் தோனியை விட வெற்றி சதவீதத்தில் விராட் கோலி அதிகமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும், இதுவரையில் வெற்றி பெறவில்லை என்பது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை என்று முக்கிய தொடர்களில் விராட்கோலி கோட்டை விட்டு விட்டதாகவும், ஐபிஎல் தொடரிலும் அவருடைய தலைமையிலான பெங்களூர் அணி ஒரு கோப்பையை கூட வெற்றி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

அவருடைய கேப்டன் பொறுப்பால் அவருக்கு அழுத்தம் உண்டாகி அது அவருடைய பெட்டிங்கையும் பாதிப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்து வந்தார். இதன் காரணமாகத்தான் அவருடைய கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் தென்ஆப்பிரிக்க நாட்டில் ஒரு நாள் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமை விராட் கோலிக்கு மட்டுமே இருக்கிறது.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்துதான் ரோகித் சர்மாவுக்கு ஒரு நாள் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது, அதோடு டி20 போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்ற முறைக்கு பயிற்சியாளர் டிராவிட் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version