ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

0
106
New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட உதவிகள் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நான்காயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தற்போது ரேஷன் கடைகளில் ஒரு புதிய மாற்றம் வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறி உள்ளார். அதாவது இன்னும் இரண்டு மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் கண் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதன் மூலம் மக்கள் சுலபமாக பொருட்களை உடனடியாக வாங்கிக் கொண்டு செல்லலாம். மேலும், ரேஷனில் குறைவான விலைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை முதலியவை வழங்கப்பட்டு வந்த வரிசையில், தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக தக்காளி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.