அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

0
135
New change in Amma restaurants!! Action to improve!!

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

அம்மா உணவகங்களின் கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் அவற்றிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர்.

ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம்.

இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் அம்மா உணவகத்தில் கிரைண்டர்,மிக்சி ,பாத்திரம் உள்ளிட்டவை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு தினமும் உணவு செய்யும் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் உணவு தயாரிக்க தாமதம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக உபகரணங்களை சரி செய்து  அம்மா உணவகத்தை மேம்பட்டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது இதில் மண்டல தலைவர் ,சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் உதவி பொறியாளர்கள் என்று பலர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டதில் அதில் பயன்படும் நிலையில் உள்ள பொருட்கள் மற்றும் பயன்படுத்த தகுதியற்ற பொருட்கள் என்று கண்டறியப்பட்டது.

இதில் தேவையற்ற பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் புதிய பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதிலும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடவே சிரமப்படும் வகையில் அம்மா உணவாக கட்டிடங்கள் படுதடைந்த நிலையில் உள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அதனையும் சரி செய்து அந்த கட்டிடங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.