H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!!
அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் தனது H1B எனப்படும் விசாவை புதுப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த வழிமுறை நடைமுறையில் உள்ளது. H1B விசா என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பணியாளர்களை ஒரு சில பதவிகளில் பணியில் நியமனம் செய்ய அமெரிக்கா தரும் ஒரு குறுகிய கால அனுமதியாகும்.
ஒவ்வொரு ஆண்டு கால முடிவிலும் இந்த விசாவை பணியாளர்கள் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். பயனாளர்கள் தங்கள் விசாவில் புதுப்பித்த தேதியை அச்சிட வேண்டும். இந்த முறையை அமெரிக்காவிற்கு உள்ளேயே செய்ய அந்நாடு அனுமதி தரவில்லை.
இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப சென்றுதான் விசாவை புதுப்பிக்கும் நிலை இருந்தது. இதனால் இவர்களுக்கு நிறைய நேரமின்மையும், பொருட்செலவும் ஏற்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தொழிலாளர்களான மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் அரசிடம் முறையிட்டு வந்தனர்.
அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விசா புதுப்பித்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன் வகையில், இனி இந்தியர்களும் மற்ற வெளிநாட்டு பயனாளர்களும் அமெரிக்காவிலேயே விசாவை புதுப்பித்துக் கொள்வதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் இத்திட்டம் தற்போது நாடு முழுவதும் கொண்டு வரப்படாமல், “பைலட் பிராஜக்ட் முறை” என்று ஒரு சிலருக்கு செயல்படுத்தப்பட்டு அதில் உள்ள குறைகளை ஆராய்ந்து சரி செய்த பிறகு அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.இந்த செய்தி அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அமைந்துள்ளது.