இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று (1-0) என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டிக்கு இரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர் விராட் கோலி தான். இந்த நிலையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி காலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் காலில் கட்டுடன் செல்வது அவருக்கு காயம் ஏற்பட்டது உறுதிப்படுத்தி இருக்கிறது.
இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. விராட் கோலி அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலி சிறந்த ரெக்கார்டு வைத்துள்ளார். நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் ஃபாரமில் இல்லை என கூறப்பட்டு வரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் போட்டியில் சதம் விளாசினார்.
இந்நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் 6 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் காலில் கட்டுடன் செல்வது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் இரண்டாவது போட்டியில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.