Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவை 46 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து !! முதல் தொடரை வெல்லுமா இந்தியா ??

New Zealand bowled out India by 46 runs!! Will India win the first series??

New Zealand bowled out India by 46 runs!! Will India win the first series??

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டியானது நேற்று நடைபெற இருந்த நிலையில் அதிக மழை காரணமாக நடைபெறவில்லை. இன்று(வியாழன்) மழை இல்லாத காரணத்தால் போட்டி தொடங்கப்பட்டது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  வரிசையாக ஆட்டமிழந்தனர்.  வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அதில் விராட் கோலி ,சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். ரிஷப் பண்ட் மட்டும் 20 ரன்கள் அடித்திருந்தார்.

இதற்கு காரணம் மழைப்பொழிவு காரணமாக ஈரப்பதம் இருப்பதால் பிட்ச் ஆனது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எளிதாக ஸ்விங் ஆகும். இதனால் எளிதாக ஸ்டம்ப் நோக்கி பந்து வருவதை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவது மிகவும் கடினம். அதிகபட்சமாக மாட் ஹென்றி  5 விக்கெட்டுகளையும், வில் ஒ ரூர்க் 4 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களை எவ்வாறு எதிர்கொள்ள உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா எந்த வகையான யுக்தியை பயன்படுத்த உள்ளார்.? முதல் தொடரை இந்தியா வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version