cricket: இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் வாஷிங்டன் சுந்தர்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் வரலாற்று சாதனை படைத்தது நியூசிலாந்து அணி. இதன்மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.இதனால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் குல்தீப் பதிலாக சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்த்தார். இன்றைய போட்டியில் ப்ளேயிங் லெவனில் விளையாடினார்.
ரோஹித் சர்மா திட்டத்தின் படி வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சூழலில் சிக்கியது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.