கோப்பையை நோக்கி செல்லும் நியூசிலாந்து!! கோட்டை விட்ட வெஸ்ட் இண்டீஸ்!!

0
119
New Zealand on their way to the trophy!! West Indies left the fort!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டியானது துபாயில் நடைபெற்று வருகிறது. இறுதி போட்டிக்கு செல்லும் அரையிறுதி இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து இரு அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவுற்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சியினை சமாளிக்க முடியாமல் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.நியூசிலாந்து அணியின் வீராங்கனை ஈடன் கார்சன் அதிகபடியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப் போட்டிக்கு வர முடியாவிட்டாலும், போட்டியில் அவர்கள் காட்டிய ஆட்டம் அவர்கள் B குழுவில் முதலிடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், உலகின் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான இங்கிலாந்தை முதல் சுற்றில் வெளியேற்றியது.

சமீப காலங்களில் அந்த அணி அதிக செயல்திறனின் பின்னணியில் போட்டிக்கு வரவில்லை, மேலும் தென்னாப்பிரிக்காவிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுடன் போட்டியைத் தொடங்கியது. இருப்பினும், போட்டியின் முக்கிய புள்ளிகளில், வெவ்வேறு வீரர்கள் தங்கள் மேலாதிக்க திறமைகளை வெளிப்படுத்தின.

இதனை தொடர்ந்து நாளை 7:30-க்கு துபாய் சர்வதேச அரங்கில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா தென்னாப்பிரிக்கா?  முதல் கோப்பையின் வெற்றியை பதிவு செய்யுமா நியூசிலாந்து?