Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்!

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்!

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடந்து வருகிறது.

உலகக்கோப்பை சுற்றுக்கான தகுதிச் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்தன. இதையடுத்து இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் போட்டியாக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் நியுசிலாந்து அணியும் மோதும் போட்டி இன்று காலை தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நியுசிலாந்து அணி ஆரம்பமே அதிரடியில் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன டிவோன் கான்வாய் அடுத்தடுத்து வந்த ப்ளேயர்களோடு பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். இதனால் அணியின் ரன்ரேட் 9 முதல் 10 என சென்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியான கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரை நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் அனாயசமாக எதிர்கொண்டு சிறப்பான இலக்கை நிர்ண்யித்துள்ளனர். கடினமான இலக்கை நோக்கி இப்போது ஆஸி அணி பேட்டிங் செய்து வருகிறது.

Exit mobile version