Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி! இந்திய அணி பந்துவீச்சு!

நியூசிலாந்து நாட்டின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்கவிருந்த தொடக்க ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மவுண்ட் மங்கனூவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தந்தாடிய இந்திய அணி தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று ஆரம்பமானது. எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

முதலில் தாஸ் என்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த வருடத்தில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச டி20 ஓவர் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version