ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து , இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னரே வெளியேறியது.
அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறின. இதன் இறுதிப் போட்டி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. இந்த போட்டியானது நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடி அமெலியா கேர் 48 ரன்களும், ப்ரூக் ஹாலிடே 38 ரன்களும் எடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறின. 20 ஓவர் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை இரண்டாவது முறையாக தட்டி சென்றது.
சரியாக பேட்டிங் செய்து 158 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்த வருடத்தில் ஆடவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியுற்றது இதனை தொடர்ந்து மகளிர் அணியும் தோல்வியுற்றது.இதனால் ஒரே ஆண்டில் இரு முறை டி20 கோப்பையின் இறுதி போட்டி வரை சென்று தோல்வியுற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.