Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3வது டி20 போட்டி – நியூசிலாந்து அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆவது போட்டியில் அஜாஸ் பட்டேலின் சிறப்பான பந்துவீச்சால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது.

நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.இறுதியில், வங்காளதேசம் 19.4 ஓவரில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், மெக்கன்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரில் 2-1 என பின்தங்கியுள்ளது. ஆட்ட நாயகன் விருது அஜாஸ் படேலுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version