புதிதாக உருவாக்கப்பட்ட காப்பீடு திட்டம்!! இனி பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம்!!
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது.
அதன்படி தொலைதூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை முன்னதாகவே முன்பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் விபத்துக்கு உள்ளாகி சமார் 300 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் அந்த விபத்தில் உயிர் தப்பிய சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தற்பொழுது வீடு திரும்புகின்றனர்.
இந்த விபத்திற்கு பிறகு ரயில்வே நிர்வாகம் பல காப்பீடு திட்டங்களை பயணிகளுக்கு கொண்டு வந்துள்ளது.இந்த நிலையில் தற்பொழுது ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்த பயணிகளுக்கு காப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதற்காக தனிநபர் காப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் வசூலிக்கப்பட்டு அதன் பிறகு பிரீமியமாக ரூ. 0.35 பைசா மட்டுமே பெறப்படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ரயில் பயணத்தின் பொழுது விபத்து ஏற்பட்டு பயணிகள் யாராவது இறந்து விட்டாலோ அல்லது சிகிச்சை பெறுகின்ற நிலைக்கு உள்ளாகினாலோ அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.