அடுத்த ஒலிம்பிக் திருவிழா எங்கு தெரியுமா? இப்போதே தயாராகும் நாடு எது!

0
140
Olympic Flag Handover to France

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. எனினும், கொரோனா தொற்று குறைந்த்தால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பெருந்தொற்று காலத்திலும் ஜப்பான் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் கண்கவர் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில், கண்கவர் வாண வேடிக்கைகளுடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் மிளரச் செய்து காண்போரை வியக்க வைத்தனர்.

இப்படியெல்லாம் படத்தில் கிராபிக்ஸ் செய்து மட்டுமே காட்ட முடியும் என்பதை முறியடித்து, நிஜத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களை மிரள வைத்துள்ளனர் ஜப்பானியர்கள். மிகப்பெரிய திருவிழாவாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றதாக ஒலிம்பிக் தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து, அடுத்த போட்டி 2024ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீசில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக ஒலிம்பிக் கொடியை, பிரான்ஸ் நிர்வாகிகளுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பிரான்சில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் ஈபிள் டவரில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு, போர் விமாணங்கள் அந்நாட்டு தேசியக்கொடி வண்ணத்தில் புகைகளை கக்கி ஈபிள் டவரை சுற்றிவதும், ஈபிள் டவர் அருகில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஒலிம்பிக் கொடியை வரவேற்ற வீடியோ ஒலிபரப்பப்பட்டது.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024ஆம் ஆண்டு நடைபெறுவதால், மூன்று ஆண்டு காலத்தில் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடைந்திருக்கும். அப்போது, பாரீஸ் ஒலிம்பிக், இன்னும் அதிகப்படியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.