இந்திய அணி  நிலமை முடிஞ்சிருக்கும்..இவர போய் நீக்க திட்டம் போட்டிங்களே!! பேட்டிங் ஆல் பேசிய நிதிஷ்!!

0
250
Nitish spoke by batting

cricket: இந்திய அணி  விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடரில் முதலில் இந்திய அணி நிதீஷ் குமார் ரெட்டியை நீக்க திட்டமிட்டது.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 4 வது போட்டியில் இந்திய அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறி வந்த நிலையில் நிதீஷ் சதம் விளாசி அணியை தலை நிமிர்த்தினார்.

26 ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கி 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த 4 வது போட்டி தொடங்கும் முன் நிதீஷ் ரெட்டி அணியில் இடம்பெற மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் இடம் பெறுவர் என கூறி வந்த நிலையில் அவர் அணியில் இருந்து நீக்க திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் 4 வது போட்டியின் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றார்.

ஆனால் இந்திய அணி மூன்றாம் நாள் விளையாடி வரும் இன்று இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக தனி ஆளாக போராடினார். மேலும் அவர் சதம் விளாசினார். இந்நிலையில் இந்திய அணி ரசிகர்கள் இவரை போய் நீக்க திட்டம் போட்டிங்களே என்று கடுமையான விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.