Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

ஐபிஎல் தொடரின் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உயர்மட்ட குழுவின் கூட்டம் தொடர்பாக தேதிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொன்னபடியே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐசிசி யின் யர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கூட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது. இதனால் ஐபிஎல் தொடங்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி நடக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதில் மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியனான மும்பை அணியும் ரன்னரான சென்னை அணியும் மோத உள்ளது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட லீக் போட்டிகள் மே 17 ஆம் தேதியோடு முடிகிறது.

Exit mobile version