இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் விளையாடி முடித்தது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்று இருந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்று வெளியேறியுள்ளது.
இந்திய அணி இதன் தொடர் தோல்வி காரணமாக கம்பீர் மற்றும் ரோஹித் மீதான விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் விராட் மற்றும் ரோஹித் இருவரின் பார்ம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர்களின் ஓய்வுக்கான குரல் அதிகரித்து கொண்டே வருகிறது. என் அவர்கள் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் மனோஜ் தீவார் கம்பீர் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். கம்பீர் மிகவும் ஆக்ரோஷமான ஒரு வீரர் அவர் பயிற்சியாளராக நியமித்தால் இதுதான் நடக்கும். வி வி எஸ் லக்ஸ்மன் தான் அவர் இடத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறிய அவர். இதுவரை இலங்கை தொடர், நியூசிலாந்து தொடர் தற்போது ஆஸ்திரேலிய தொடர் என தொடர் தோல்விகள் மட்டுமே அடைந்து வருகிறது என கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார்.