என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது!! பில்டப்பில் வெளிவந்த ஜாவான் ட்ரெய்லர் !!

0
124
No hero can stand before me!! Jawaan Trailer Released in Buildup !!

என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது!! பில்டப்பில் வெளிவந்த ஜாவான் ட்ரெய்லர் !!

ஷாருக்கான் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ஜாவான்.இந்த படத்தை இயக்குவதன் மூலம் அட்லீ பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்த படத்தில் ஷாருக்கான் அவர்களுடன்  இணைந்து விஜய் சேதுபதி ,நயன்தாரா ,பிரியாமணி ,சுனில் குரோவர்  போன்ற பெரிய ரசிகர் பட்டாளமே நடித்து வருகின்றது.

சமீபத்தில் இந்த படத்தின் நயன்தாராவின் புதிய லுக் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் தற்பொழுது படம் செப்டம்பர் 7 ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகின்றது ஏனென்றால் ஷாருக்கான் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களாக எந்தவித படமும் வெளிவரவில்லை. இந்த வருடம் தான் “பதான்” என்னும் படம் வெளிவந்தது இது பாலிவுட் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் இருந்தது.

மேலும் இன்னொரு தரமான படமாக ஜாவான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணி பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இந்த படத்தை செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு கூறியது.

தற்பொழுது அந்த படத்தின் முன்னோட்ட காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது. இதில் இது வெறும் ஆரம்பம் தான் இனிமேதான் இருக்கு என்று வாசன காட்சிகள் இடம்பெற்றுள்ளது .

இந்த படமானது தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் காட்சியால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.