Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

தலையின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி தலைவலியாகும். பதின்ம வயதினரிடையே (டீன்ஸ்) அல்லது வளர்ந்த பிள்ளைகளிடையே தலைவலி மிகவும் சாதாரணமானது. இளம் பிள்ளைகளுக்கும்கூடத் தலைவலி இருக்கலாம்.

தலைவலிக்கான அறிகுறிகள்:

தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம்.

1: குறைந்தளவு நித்திரை

2: உணவு

3: வீடியோ கேமுகள் உபயோகித்தல், தொலைக்காட்சி பார்த்தல் அல்லது பிரகாசமான மின் விளக்குகள்

4: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏதாவது தலைக்காயம். தலைவலிக்கான காரணங்கள்:

தலைவலிகள் முதன்மையானவையாக அல்லது இரண்டாம் பட்சமானவையாக இருக்கலாம்.

முதன்மையான தலைவலிகள் மூளை வேதிப்பொருட்களில் மாற்றங்கள், நரம்பு அல்லது இரத்தக்குழாய்ச் செயற்பாடு, அல்லது தலை அல்லது கழுத்து பகுதியில் தசை இழுப்பு என்பன சம்பந்தப்பட்டவை.

இரண்டாம் பட்சத் தலைவலி உங்கள் பிள்ளைக்கு ஏற்கனவே இருக்கும் வேறொரு மருத்துவ நிலைமையினால் ஏற்படுகிறது. அவை பின்வருவனவற்றை உட்படுத்தும்:

1: மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய தொற்றுநோய்கள்.

2: ஒவ்வாமைகள்.

3: மருந்துகள், மன உளைச்சல், அல்லது கவலை.

4: குறிப்பிட்ட சில உணவுகள் அல்லது அவற்றின் உட்பொருட்களுக்கு கூர் உணர்வு

5: தலைக் காயம்

6: சளி உறுத்தல்

7: பல் அல்லது TMJ ( அடிமுதுகுத் தண்டுவட மூட்டுக்கள்) ஊற்றுமூலம்

8: போதைமருந்துகள் அல்லது நச்சுப் பொருட்களுடன் தொடர்பு

9: இரத்தக்குழாய் விரிவடைதல் அல்லது கட்டி போன்ற மூளை சம்பந்தமான பிரச்சனைகள்.இதனை போக்குவதற்கு வீட்டை செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம்

இஞ்சி

வெற்றிலை

மிளகு

செய்முறை:

1: முதலில் ஐந்து சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும் பின்பு அதில் உள்ளே உள்ள அந்த வெள்ளை சின்ன இதழை எடுத்துக் கொள்ளவும்.

2: உரலில் எடுத்து வைத்த சின்ன வெங்காய இதழ்கள் ஒரு துண்டு இஞ்சி 5 மிளகு மற்றும் வெற்றிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3: இவை அனைத்தும் அரைத்த பிறகு கரண்டியில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக வைக்கவும்.இதனை மிதமான சூட்டில் தலைவலி இருக்கும் பொழுது தடவிக் கொள்ளலாம்.

சிலர் பேருக்கு உச்சந்தலை மட்டும் வலிக்கும் அப்பொழுது கூட இதனை தடவலாம் அல்லது பித்தம் இருப்பவர்களுக்கும் தலைவலி வரும் அவர்களும் கூட இதனை தடவிக் கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.சில பேர் தலைவலி வந்தால் மருந்து மாத்திரை தைலம் இது போன்ற எடுத்துக் கொள்வார்கள்.

அது போன்று எடுத்துக் கொள்ளக் கூடாது அப்படி எடுத்துக் கொண்டால் நரம்பு பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இது போன்ற வைத்தியத்தை செய்தால் தலைவலி பிரச்சனை தீர்ந்து விடும்.

Exit mobile version