இந்தியாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவர்கள் தற்பொழுது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கடைசி இரண்டு ஆண்டுகளாக பகல் இரவு டெஸ்ட் பெட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தியாவில் தற்பொழுது வரை மூன்று பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த மூன்று பகல் இரவு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது இந்தியா தன்னுடைய முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியை வங்கதேசத்திற்கு எதிராக விளையாடியது. இந்த போட்டி மூன்று நாட்களில் முடிந்தது. இரண்டாவதாக இங்கிலாந்து அணியுடன் மோதிய பகல் இரவு டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள்ளும், மூன்றாவதாக இலங்கைக்கு எதிராக விளையாடிய பகல் இரவு டெஸ்ட் போட்டி மூன்று நாட்களுக்குள்ளும் முடிந்தது.
இவ்வாறு இந்தியாவில் பகல் இரவு டெஸ்ட் பெட்டிகள் நடைபெறும் பொழுது ஆயிரக் கணக்கான ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வந்து பார்க்கிறார்கள். அவ்வாறு பார்க்கும் ரசிகர்களுக்கு பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களில் அல்லது மூன்று நாட்களில் முடிவது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதால் இந்தியாவில் இனி பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த வாய்ப்பே இல்லை என்று ஜெய்ஷா அவர்கள் கூறியுள்ளார்.
இது குறித்து ஜெய்ஷா அவர்கள் “பொதுவாக டெஸ்ட் போட்டி 5 நாட்கள் நடைபெறும். அதே போல பகல் இரவு டெஸ்ட் போட்டிகளும் 5 நாட்கள் நடைபெறும்.அவ்வாறான சூழ்நிலையில் ரசிகர்கள் அனைவரும் 5 நாட்களுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்து பகல் இரவு டெஸ்ட் போட்டியை கண்டு களிக்கின்றனர். இவ்வாறு இருக்க பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் விரைவில் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் முடிவதால் மீதம் உள்ள நாட்களுக்கான டிக்கெட் பணத்தை எங்களால் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்க முடியாது. இது எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. எனவே இந்தியாவில் இனி பகல் இரவு டெஸ்ட் பெட்டிகள் நடத்த மாட்டோம்” என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.