இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!!
இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைபட்டுள்ள தண்ணீர் பாட்டில்கலையே எடுத்து செல்கின்றனர்.
எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பழக்கம் அனைவருக்கும் உண்டு.அந்த வகையில் நாம் வாங்கும் பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்டிக் பொருட்களால் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விற்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் நாடு முழுவதும் அரை லிட்டர் முதல் 20 லிட்டர் இந்த தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இப்படி விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்களையே பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ள தண்ணீரை பயன்படுத்த கூடாது என்பது அறிவியல் பூர்வ உண்மை என்று கூறப்படுகின்றது.
இந்த தண்ணீர் பாட்டில்கள் பெரிதும் தொலைதுரம் பயணம் செய்பவர்களே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை அற்றது என்பதால் அதனை அளிக்க முடியாது. இதனால் அதிக அளவில் சுற்று சூழல் மாசுபாடு ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்த தண்ணீர் பாட்டில்களை பல மாநிலங்கள் தடை செய்துள்ளது.
அந்த வகையில் தற்பொழுது அசாம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடங்கிய குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தும் அக்டோபர் 2 தேதி முதல் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்கள் தடை செய்யபடுவதாக அந்த மாநில முதல்வர் ஹிமந்தா விஷ்வா சர்மா தெரிவித்துள்ளார்.