Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!!

#image_title

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பார்ம் குறித்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முதல் ஒருநாள் போட்டியில் 41 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரன் எதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். மேலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் சேர்த்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் கொண்ட இந்தியாவில் மற்றும் இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பாக ஆடக் கூடிய ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பார்ம் குறித்து கேள்வி எழுந்தது. இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பார்ம் குறித்து ஆஸ்திரேலிய அணி கவலைப்படவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் பார்ம் குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க் அவர்கள் “ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பேட்டிங் பார்முக்கு அவர் இதற்கு முன்னர் விளையாடிய சிறந்த ஆட்டங்கள் தான் சான்று. ஸ்டீவ் ஸ்மித் அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் ஸ்டீவ் ஸ்மித் அவர்களுடைய பார்ம் எங்களுக்கு பெரிய கவலையாக தெரியவில்லை. அணியும் அவருடைய பார்ம் குறித்து கவலைப்படுவது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் பேட்டிகளில் இடம் பெறாத மிட்செல் ஸ்டார்க் அவர்கள் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி நாளை(செப்டம்பர்27) நடைபெறவுள்ளது. இந்திய அணி முதல் இரண்டு பேட்டிகளில் வென்று ஒருநாள் தேடலை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version