இனி உடம்பில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும்!! இந்த ஒரு காய் போதும்!!

0
141

இனி உடம்பில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும்!! இந்த ஒரு காய் போதும்!!

பொதுவாக உடலில் பல்வேறு வகையான வழிகள் நோய்கள் இவை அனைத்தையும் சரி செய்வதற்கு என்று மருத்துவமனைகளை தேடி ஆனால் இனி வீட்டில் இருந்தே பல்வேறு வகையான நோய்களுக்கு மற்றும் வலிகளுக்கு ஒரே ஒரு தீர்வு அதுவும் ஒரே ஒரு காய் இருந்தால் மட்டும் போதும் இந்த அனைத்து நோய்களையும் தீர்த்துவிடலாம்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஜாதிக்காய் இதை வைத்து உடல் சோர்வு ,வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி, தாம்பத்திய பிரச்சனை, பல் பிரச்சனை, சரும பிரச்சனை, அஜீரண கோளாறு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி போன்றவற்றை சரி செய்யலாம்.

இவ்வாறு பயனுள்ள ஜாதிக்காய் பயன்கள் என்றால்

ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

உடல் சுறுசுறுப்பாகும்

ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.

வயிற்றுபோக்கு தீரும்

ஜாதிக்காய் தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.

வாந்தி பேதி நிற்கும்

ஜாதிக்காயை பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு கிளாஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.

சரும பிரச்சனைகள் தீர்க்கும்

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.

அம்மை கொப்பளங்களை சரிசெய்யும்

அம்மை நோய் ஏற்பட்டால் உடல் முழக்க கொப்பளங்கள் தோன்றும். அம்மை நோய் மறைந்தாலும் தழும்புகள் உடனடியாக மறையாது. அந்த சமயத்தில் ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும்.

பல் பிரச்சனைகள் தீர்க்கும்

சிலருக்கு பல் வலி ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த சமயத்தில் பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை தடவினால் பல் வலி பறந்தோடும்.

அஜீரணம் குணமாகும்

அஜீரண பிரச்னையால் அவதிபடுபவர்கள் ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் எடுத்து நன்றாக தூள் செய்து உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பிரச்சனை சரியாகும்.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

நரம்பு தளர்ச்சி நீங்கும்

ஜாதிக்காய் மற்றும் பிரண்டை உப்பை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நரம்பு தளர்ச்சி பிரச்சனை தீரும்.

தொண்டை சதையை குறைக்கும்

ஒரு சிலருக்கும் தொண்டையில் சதை வளரும். அப்படிப்பட்டவர்கள் ஜாதிக்காய் சிறிது எடுத்து கொண்டு அதனுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் மிளகு இரண்டு பங்கு சேர்த்து தூளாக அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் 2 அல்லது 3 சிட்டிகை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் 2 அல்லது 3 மாதங்களில் சதை வளர்ச்சி குணமாகும்.

கண் பார்வை தெளிவடையும்

பார்வை திறன் சரியாக இல்லாதவர்கள் இரவில் தூங்கும் முன்பு ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி பற்றுப் போட்டு விட்டு காலையில் எழுந்தவுடன் முகம் கழுவி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.