இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவானது கடந்த 1867 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில், ஐரோப்பிய நாடுகில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கொண்டுவந்து நடப்பட்டது.
எனவே, இந்த செடிகளும் மரங்களும் மிகவும் செழிப்பாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்த செடிகள் மற்றும் மரங்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில், தற்போது சுற்றுலா பயணிகள் அனைவரும் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் செடிகளை பற்றி தெரிந்து கொள்ள QR கோர்டு வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த QR கோர்டை ஸ்கேன் செய்து சுற்றுலா பயணிகள் இந்த செடிகள், மரங்கள் குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ளலாம். இதனையடுத்து, 21/4 லட்சம் செலவில் ஆயிரம் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளின் பெயர்கள், பூர்வீகம், பலன்கள் முதலியவை ஆய்வு செய்யப்பட்டு QR கோர்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாவரவியல் பூங்கா உதவி இயக்குனர் பாலசந்தர் கூறி உள்ளார்.
மொத்தம் ஆயிரம் மரங்களுக்கு இந்த QR பொறுத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முதலில் நூறு மரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, ஜப்பான் ரோஸ் என்ற கமாலியா, முட்டைக்கோஸ் மரம், குரங்கேரா மரம், ருத்ராட்சை மரம் முதலிய மரங்களில் இந்த QR கோர்டு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது முதன் முறையாக நீலகிரி தாவரவியல் பூங்காவில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல், தாவரவியல் சார்ந்த படிப்புகளை படிப்பவருக்கும் மிகவும் பயனளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.