இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
80
Now it is mandatory in tourist companies!! Action announcement of the state government!!

இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏராளமான சுற்றுள்ள தளங்கள் உள்ளது.அதனை பார்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி காட்டுவதற்கு என்று மக்கள் உள்ளனர்.இதனை பணியாக வைத்து செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதில் இனி கடலூர் மாவட்டத்தில் புதிதாக சுற்றுலா தொழில் தொடங்கும் நிறுவனம் கட்டாயம் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை அறிவித்து பல நாட்கள் ஆகி உள்ள நிலையில் சுற்றுலா துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலா நிறுவனங்கள் இயங்கி வருவதாக கூறப்படுகின்றது என்றார்.

இனி புதிதாக செயல்படும் நிறுவனங்கள் அனைத்தும் அரசு கொடுத்துள்ள   www.tntourismtors.com  இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றுலா துறையில் பதிவு செய்யாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மேலும் பதிவு செய்வது தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரிய வேண்டும் என்றால் மாவட்ட சுற்றுலா அலுவலர் ,மாவட்ட சுற்றுலா அலுவலகம் ,ரயில்வே பீடர்ஸ் ரோடு ,சிதம்பரம் ,என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு  04144-238739, 8939896399     என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.