இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!!
ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது,
தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார்.
இனி தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320 வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி டாஸ்மாக் கடைகளில் நவீன முறையில் மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த வகையில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 5 டாஸ்மாக் கடை வீதம் என்ற மதிப்பில் தமிழக அரசு மாற்றம் செய்ய உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 மதுபான கடைகள் நவீன முறையில் மாற்றம் செய்யப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் மூலம் பணம் செலுத்தப்படும் வசதியை கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.