Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Just Now: இனி ஆன்லைன் மூலமே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்!! வெளிவந்த நியூ அப்டேட்!!

Now you can get medicines online!! New update released!!

Now you can get medicines online!! New update released!!

Just Now: இனி ஆன்லைன் மூலமே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்!! வெளிவந்த நியூ அப்டேட்!!

திருப்பதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணமாகவே தான் உள்ளனர். திருப்பதி ஏழுமலையானை காண உலகெங்கும் பல கோடி பக்தர்கள் இருக்கும் நிலையில் வருகைக்கு ஏற்ப அவ்வப்போது தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிடும்.

மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கீழ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த வகையில் ஏழை எளிய மக்கள் பலரும் இந்த மருத்துவமனைக்கு வந்து பயனடைந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனை குறித்து கூட பிரதமர் மோடி முதல் பலரும் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி, இணை செயல் அதிகாரி மற்றும் அம் மருத்துவமனையின் இயக்குனர் ஆகியோர் நேரடியாக சென்று அங்கிருந்தவர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தனர்.

அவ்வாறு கேட்டதில் டயாலிசிஸ் செய்ய வரும் நோயாளிகளுக்கு போதுமான அளவு அதற்கான பாக்ஸ் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேற்றி தருவதாக கூறிவிட்டு, தேவஸ்தானம் செயல் அதிகாரி நரம்பியல் துறைக்கு சென்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் இனி நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை அதற்கும் மாறாக ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு தேவையான ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். மேற்கொண்டு  ஆன்லைன் மூலமே சிறுநீரக நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்தார்.

அத்தோடு சிறுநீரக நோயால் பெருமளவில் பாதிக்கப்படும்  நபர்களுக்கு உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிவரும் நாட்களில் மருத்துவமனையில் உள்ள செயல்பாடுகள் முதல் பொறியியல் பணிகள் வரை அனைத்தும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறினார். இவ்வாறு மென்பொருள் மூலம் மருத்துவமனையின் தரவுகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் அது மிகவும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version