Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!!

#image_title

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!!

குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால் மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த குழப்பங்கள் தகுதித் தாளான முற்பகல் தேர்வில் மட்டுமே நடந்தததாலும், அது தரவரிசைக்கு கணக்கில் கொள்ளப்படாததால் சிக்கல் இல்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி கருதுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்த குளறுபடியில் தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version