அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!!

0
96
Old Retirement Scheme for Govt Employees !! Important announcement coming out today!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு பிரதிநிதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி வேறொன்றை அமைக்க ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் தராது என்று குழுவிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த பிரச்சனை தீற வேண்டுமென்றால் புதிய ஓய்வூதிய திட்டமான NPS திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய திட்டத்தை நடைமுறை படுத்துவதே ஒரே  வழியாகும்.

சில நாட்களுக்கு முன்பு NPS என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றம் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.அப்பொழுது குழு அமைப்பின் பிரதிநிதி பணியாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக பல வாதங்களை முன் வைத்தார்.

இந்த கூட்டத்தில் NPS என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டமான OPS யை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று குழு தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.தற்பொழுது ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய அன்பில் மகேஷ் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

அவரிடம் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார். இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எனவே ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் முறை கொன்று வரப்பட்டால் மற்ற ஊழியர்களுக்கு விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும் என்று கருதப்படுகின்றது.