பதக்கம் வெல்லுமா? இந்திய பெண்கள் ஹாக்கி அணி பரபரப்பில் இந்திய ரசிகர்கள்!

0
201

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் லீக் ஆட்டங்களில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதன் பின்னர் சீறி எழுந்த இந்திய பெண்கள் ஹாக்கி அணியினர் சிறப்பாக விளையாடி அயர்லாந்து நாட்டை ௧-0 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்க நாட்டை 4 -3 என்ற கணக்கிலும் தோல்வியுறச்செய்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதில் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 1 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி. தங்கம் வெல்லுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில், இன்று ஆரம்பமான மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில், சற்றுமுன் ஆரம்பமான இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான ஆட்டத்தின் இரண்டாவது கால் இறுதிப்பகுதியில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. அத்துடன் குர்ஜித் கவுர் ஒரு கோல் அடித்து அசத்தினார். வந்தனா ஒரு கோல் அடித்து இருக்கின்றார்.

முன்னதாக 41 வருடங்களுக்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது அதேபோல இந்திய மகளிர் ஹாக்கி அணியும் வரலாறு படைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் ஆட்டத்தை கண்டு கொண்டு இருக்கிறார்கள்.