ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

0
217
#image_title

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். எனவே கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், சேலம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் பக்ரீத்-ற்கு வெளியூர் பயணம் மேற்கொள்ள பல மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இது நாள் வரையில் முன்பதிவு செய்ததைவிட புதன்கிழமை பயணம் செய்ய முன்பதிவு அதகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் தற்போது நிரம்பி விட்டது.

இதனால் காத்திருப்போரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. தக்கல் முன்பதிவு காத்திருப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

எப்போதும் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் ஆனால் தற்போது பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் அதிகரித்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் இப்பெருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.