Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிகளுக்கு ஒருநாள் அரசு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!!

One day government holiday for schools!! District Collector's action announcement!!

One day government holiday for schools!! District Collector's action announcement!!

பள்ளிகளுக்கு ஒருநாள் அரசு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது.

அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது.

தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது.

மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் காலங்களில் இந்த பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இன்னும் பல மாவட்டங்களில் பருவமழை பெய்ந்து கொண்டு வருவதால் பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டு வருகின்றது.இதுபோன்ற காரணங்களால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பல விடுமுறைகள் அளிக்கபடுவதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பள்ளி இயங்கும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Exit mobile version