மிர்புரில் இன்று நடைபெறும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளது. வங்காளதேச அணியில் வழக்கமான கேப்டன் தமிழ் இக்பால் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக லிட்டான் தாஸ் கேப்டனாக இருப்பார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு வங்காளதேசம் சென்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியபோது அந்த அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. இதனால் இந்திய அணி, வங்காளதேசத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமால் கவனமுடன் விளையாடி தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 30 போட்டிகளிலும், வங்காளதேசம் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.