Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

only-these-people-dont-have-schools-tamil-nadu-governments-sudden-announcement

only-these-people-dont-have-schools-tamil-nadu-governments-sudden-announcement

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து,அதற்கான முடிவுகளும் வெளியான நிலையில் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் கூறியிருந்தனர்.

ஆனால் கோடை வெயிலின் தாக்கமானது அதிகளவில் உள்ளதால் பள்ளி மாணவர்களால் வகிப்பிற்கு வந்து படிக்க முடியாத சூழல் உள்ளது.எனவே ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

தற்பொழுது அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் இந்த வெயிலின் தாக்கமானது ஓர் சில மாவட்டங்களில் குறைந்த பாடில்லை.எனவே இன்று முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

இதனிடையே ஜூன் 1 ஆம் தேதி பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்டது.இவ்வாறு அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.அதே போல சிபிஎஸ்சி பள்ளிகள் ஆரம்பக்கட்ட வகுப்புக்களை தொடங்காமல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கலாம் என தெரிவித்தார்.

தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கலாமா என்று அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனையின் முடிவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும், 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கபப்டும் என கூறியுள்ளனர்.

Exit mobile version