டி20 ஒருநாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒருநாள் டி20 அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. டேஸ்ட் மற்றும் டி20 அணிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.டெஸ்ட் அணியில் வழக்கம் போல தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில், இந்திய அணிக்காக 71 டெஸ்ட் ஆட்டங்களிலும், 111 ஒருநாள் ஆட்டங்களிலும், 46 டி20 ஆட்டங்களிலும் விளையாடியிருக்கிறார்.ஒருநாள் அணியில் எந்த ஒரு தமிழக வீரருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. டி20 அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, மற்றும் வாஷிங்டன் சுந்தர், ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
21 வயதான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும், 23 டி20 ஆட்டத்திலும் விளையாடி இருக்கிறார். 29 வயதான வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக, இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.
வருணை ரூபாய் 4 கோடிக்கு ஏலத்தில் தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.கொல்கத்தா அணி சார்பில் ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு தேர்வாகி, அனைவரையும் அவர் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.