ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!
கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் தலைமை வகித்து பேசினர். அதிமுக கட்சி சார்பில் மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று தேனியில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆரப்பாட்டத்தை பற்றி பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் பேசி வந்தனர். மேலும், இந்த ஆரப்பாட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் இருவரும் இனைந்துள்ளனர். இவர்களின் இந்த புதிய உறவு தற்போது கட்சி நிர்வாகிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்களை குட்டி யானையில் அடைத்து கூட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடச்சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்த தொண்டர்களை ஒரு சிறிய குட்டி யானை வண்டியில் ஒட்டு மொத்தமாக நாற்பது பேரை அடைத்து வந்தனர்.
பொதுவாக பத்திலிருந்து இருபது பேர் மட்டுமே வரக்கூடிய இந்த வண்டியில் இவ்வளவு பேரை கூட்டி வந்தது பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு பல்வேறு கருத்துக்களை அனைவரும் கூறி வருகின்றனர்.