Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

#image_title

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை இன்று வழங்கியது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஎஸ் அவர்களின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் வரத் தொடங்கினர். எம்.பி.கோபாலகிருஷ்ணன் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் துதி திருநாவுக்கரசு உள்ளிட்ட பல ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவசரஅவசரமாக ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  ஓபிஎஸின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

 

Exit mobile version