ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகள் வேகமாக ஒருபுறம் நடந்து கொண்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் இதற்காக முகாம்கள் நடத்தி வர இருக்கின்ற நிலையில் விண்ணப்பங்களை வழங்க தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.
இந்த உதவித்தொகை பெரும் மக்கள் கட்டாயம் ரேஷன் கார்டுகளில் தங்களது கை ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உதவித்தொகை பெற விரும்பும் மகளிரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது மேலும் பயனாளர்கள் அனைவரும் கட்டாயம் ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான பணிகளை தமிழக அரசானது வருகின்ற ஜூலை 17 ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்திருப்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் உள்ள அனைத்து கைரேகை கருவிகளும் சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.