Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! 217 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி-20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் கைவிடப்பட்ட காரணத்தால் பாகிஸ்தான் அணி 1 க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றது.

அதனடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவர்களில் 217 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் பஹாத் ஆலம் அரைசதம் அடித்து 56 ரன்களில் வெளியேறினார், அஷ்ரப் 44 பாபர் அசாம் 30 ரன்னும் சேர்த்தார்கள்.

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது முதல் நாள் முடிவில் வெஸ்ட் அணி 2 விக்கெட் இழப்பிற்கு இரண்டு ரன்களை எடுத்திருக்கிறது

Exit mobile version